Sunday, September 10, 2023

ஸ்ரீ நவசக்தி மஹா வாராஹியம்மன்

 



ஸ்ரீ நவசக்தி மஹா வாராஹியம்மன்
பெரியநாயக்கன் பாளையம் கோவை-20
வாராஹி என்னும் அற்புத தெய்வம்


ஸ்ரீ வாராஹி மந்திராலயம் துவக்கம்
1992ல் கோவை ராமநாதபுரம் ராமகிருஷ்ணபுரத்தில் துவக்கப்பட்டது.
1994, ஆனி மாதம் கோவை சௌரிபாளையம் பக்கத்தில் இந்த கோவில் தற்பொழுது உள்ளது.
இந்த சோபகிருத்து வருடம் 2023 ஏப்ரல் 23 ஞாயிறு சாக்த ஸ்ரீவாராஹி மணிகண்ட சுவாமிகள் மூலம் "சன்மத்தாலயம்" அமைப்போம் என்ற நோக்கத்தில் சக்தி வழிபாட்டின் பிரதான சக்திதெய்வங்களான "ஸ்ரீ ஜெய சூலினி துர்கா தேவி, ஸ்ரீ வனபத்ர காளி" என்ற இரண்டு தாயருக்கும் மகா பிரமாண்ட ஆலயம் அமைத்து மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
பின்னர் சிவன் ஆலயம், பெருமாள் ஆலயம், மகா வாராஹி பாதாள கோயில் அமைதல், ஆஞ்சிநேயர் கோயில், ராஜகோபுர வாசல்கள் என திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த இடத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் 
எஸ்.ஆர் ராமசாமி தேவரின் மூலம் உருவான காசி விஸ்வநாதர் 
இங்கு 
முன்னரே உள்ளார்.
அவர் மகன் திரு சத்தியமூர்த்தியின் உதவியால் இந்த இடம் சிவன் சொத்து  என்பதால் அவர் செலவுக்கு இடம் வாடகை கொடுத்து அங்கு உள்ள இடங்களை, கட்டிடங்களை புனரமைத்து கோயில்களை கட்டப்பட்டது. அங்கு உள்ள மகா மாரியம்மன் கோயிலில் இருந்து அம்மன் அழைபோடு ஸ்ரீ வாராஹி அம்மனை அழைத்து வந்து  இந்த கோயிலை ஸ்தாபித்தார். வழிபாடுகள், பிரார்த்தனைகள், மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள், பரிகாரங்கள், வேத வகுப்புகள், பக்தி யோகம், கர்மயோகம், ஞானயோகம், ராஜயோகம் மற்றும் பஞ்சம பஞ்சபட்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 
மேலும் 1996 முதல், தமிழ்நாட்டின்அந்தணர்களும், கேரளாவின் நம்பூதிரிகளும், தமிழகத்தின் மிகப்பெரிய ஆதீனங்கள், மடாதிபதிகள் மற்றும் சான்றோர்களை அழைத்து வந்து தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மகாயாக விழா சிறப்பாக விழாக்களை நடத்தினார். 
கூடலூர் கவுண்டம்பாளையம் யுஐடி கல்லூரி அருகே தற்போது இயங்கி வரும் இக்கோயிலில் 10 அடி 16 அடியில் வாராஹி சிலைகள், 12 அடியில் துர்க்கை தேவிக்கு சிலை, 
8 அடி பைரவருக்கு சிலை மற்றும் சனீஸ்வரருக்கு 12 அடி உயரத்தில் சிலைகள் வடிவமைத்து கோயில் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து 25 ஆண்டுகளாக வாராகி அன்னைக்கு மகாயாக விழா சிறப்பாக இத்தலத்தில் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த இடம் இயற்கை அழகுடன் தென்னந்தோப்பு மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.பைரவர் கோவிலை சுற்றி அஷ்டபைரவரும் மற்றும் அழகான ஐயப்பன் கோவில் உள்ளது.
ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இங்கு வரும் பக்தர்களுக்கு வியாபாரம், விவசாயம், தொழில், உடல் பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகள் என எல்லாவற்றுக்கும் சுவாமிகள் தீர்வு வழங்குகிறர்.
இங்கு நடத்தப்படும் எந்த பரிகாரங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அர்ச்சனைக்கு 
மட்டுமே கட்டணம் வழங்கபடுகிறது. மாதாந்திர அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி ஆகிய காலங்களில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது.வளர்பிறை, தேய்பிறை, அஷ்டமி நாட்களில் மாலை முதல் இரவு வரை பைரவர் வழிபாடு, ஹோமங்கள், பக்தர்கள் பிரச்சனைகளை தீர்க்கிறார்கள். இந்த திருமடத்தில் கடந்த 18 ஆண்டுகளாக மாலை 7 மணி முதல் 8.30 வரை ஸ்ரீ வாராஹி ஹோமம் நடைபெற்று வருகிறது.
மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மாலை பெண்களுக்கு மகாலட்சுமி கடாக்ஷம் மற்றும் அனைத்து சுபிட்சங்களும் கிடைப்பதற்காக திருவிளக்கு வழிபாடு நடத்தப்படுகிறது இங்கு குங்கும அர்ச்சனை வழிபாடு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. ஒன்றை கோடிக்கு மேல் அர்ச்சனை செய்யப்பட்ட அமாவாசை  குங்குமம் பௌர்ணமி பஞ்சமி நாட்களில்பிரசாதமாகவழங்கப்படுகிறது. ஸ்ரீ வாராஹி மந்திராலயம் டிரஸ்ட், ஸ்ரீ மகா சங்கேதா ,டிரஸ்ட், ஸ்ரீ வாராஹி சுவாமிஜி அன்ன சேவா ஆகியவற்றை மத்திய அரசின் வரிசலுகை விதிகளை பெற்று மூன்று டிரஸ்ட்களாக இந்த மடம் இயங்கி வருகிறது.
இந்த மடத்தின் மாபெரும் வளர்ச்சிக்கும் சுவாமிகளின் பெயர் புகழ் ஆகியவற்றிற்கும் பக்கத்துணையாக எப்படி பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சனுக்கு பக்கபலமாக அன்னை ஸ்ரீ சாரதா தேவி இருந்தார்களோ அதுபோல ஸ்ரீ வாராஹி சுவாமிஜிக்கு லதா மாதாஜி அம்மா அவர்கள் பக்கத்துணையாக இருந்து வருகிறார்கள்.

சாக்த ஸ்ரீவாராஹி மணிகண்ட சுவாமிகள்

லதா மாதாஜி அம்மா

ஸ்ரீ வாராஹி மந்திராலயம் அறக்கட்டளை

சாமித்தோட்டம், ஸ்ரீ பாரதி நகர், யுனைடெட் 
கல்லூரிஅருகில், கூ கவுண்டம் பாளையம், 
பெரிய நாயக்கன் பாளையம், கோவை -20 
தொலைபேசி:0422-7140071, 9244421389, 9965520108, 
7502515088

கடந்த 20 ஆண்டுகளாக மத்திய மாநில அரசின் பத்திரிக்கை துறையில் பதிவு பெற்று ஸ்ரீ வாராகி விஜயம் பத்திரிக்கையை நடத்தி வருகிறார்.

சமூகத்தின் மீது அக்கறை கொள்ளும் விதத்தில் 
பாதிக்கப்பட்ட ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு நலம் கருதி 
ஸ்ரீ வாராகி ஏழை மாணவர்கள் இலவச நல விடுதி நடத்தி வருகிறார்.
வயது முதிர்ந்தோர் ஆதரவற்ற நிலையில் தவிக்கின்ற ஆண் பெண் இருபாலருக்கும் ஸ்ரீ வாராஹி அன்னை முதியோர் இல்லம் இலவசமாக நடத்தப்படுகிறது.
அவர்களுக்கு உணவு உடை இருப்பிடத்தோடு இலவச மருத்துவ உதவியும் செய்யப்படுகிறது.

ஸ்ரீ தத்தாத்ரேயர் கோசாலை ஒன்று உருவாக்கப்பட்டு 100 பசு மாடுகளுக்கு மேல் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குதிரைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
 
வராஹி மூல மந்திரம்                                           
 ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட் இட் 
ஸ்ரீ வராஹி மூல மந்திரம் |
வராஹி மூல மந்திரம் ஒரு நாளில் 3 அல்லது 21 அல்லது 108 முறை, கலசர்பா பிழை அல்லது உங்கள் ஜாதகத்தில் ஏதேனும் பிழைகள் நீங்க 
48 நாட்கள் சொல்லவும்வராஹி தேவிக்கு மாதுளை பழம், வெல்லம் மற்றும் புலிஹோரா ஆகியவற்றை வழங்கலாம். பிரம்மா முஹுரத்தில் வராஹி தேவியை வணங்குவது ஆச்சரியமான முடிவுகளைத் தரும்.
Article by: Mrs. Hema Prabhakar 
Email ID: hemap268@gmail.com  


 



                                                   






No comments:

Post a Comment

ஸ்ரீ நவசக்தி மஹா வாராஹியம்மன்

  ஸ்ரீ நவசக்தி மஹா வாராஹியம்மன் பெரியநாயக்கன் பாளையம் கோவை-20 வாராஹி என்னும் அற்புத தெய்வம் ஸ்ரீ வாராஹி மந்திராலயம் துவக்கம் 1992ல் கோவை ராம...